லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் பேட்டரி ஆயுளை நீட்டிக்க வேண்டுமா...? டிப்ஸ் இதோ....

tips-to-extend-laptop-and-smartphone-battery-life
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-02 20:10:00

நவீன தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு பெருகிவரும் நிலையில் அவற்றிற்கு சக்தியூட்ட பயன்படும் பேட்டரிகளில் யாரும் முறையாக கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களின் பேட்டரியில் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு பேட்டரிகளில் கோளாறு ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பதோ, எவ்வாறு அதன் ஆயுட்காலத்தை நீடிப்பது என்பதை பற்றிய தெளிவோ பலருக்கும் கிடையாது. எனவே இந்தப் பதிவில் பேட்டரியின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் சில வழிமுறைகளைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.

பேட்டரியின் ஆயுட்காலம் பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும். ஒரு நாளைக்கு எத்தனை முறை சார்ஜ் செய்கிறோம் என்பதும், எந்த சூழ்நிலையில் சார்ஜிங் செய்கிறோம் என்பது போன்ற பல்வேறு காரணிகள் இதில் அடங்கும். சரியான முறையில் பேட்டரியை சார்ஜ் செய்ய கற்றுக் கொண்டால் பேட்டரியின் செயல்திறன் அதிகரிப்பதோடு அதன் ஆயுட்காலத்தையும் நம்மால் நீட்டிக்க முடியும். பேட்டரி ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் சில வழிமுறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

இன்றைய மாடர்ன் எலக்ட்ரானிக் சாதனங்களில் லித்தியம் அயன் பேட்டரிகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு எலக்ட்ரோடுகளுக்கு இடையில் லித்தியம் அயனிகளை நகர வைப்பதன் மூலம் இவை சக்தியை வெளிப்படுத்துகின்றன. இந்த வகை பேட்டரிகளை அதிகம் சார்ஜ் செய்வது கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். 20 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து வைத்துக் கொள்வது இவற்றின் செயல் திறனையும் ஆயுட்காலத்தையும் நீட்டிக்க உதவும்.

பேட்டரிக்கேற்ற சார்ஜிங் வழிமுறை:

இரவு முழுவதும் பேட்டரியை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து சார்ஜ் செய்து கொண்டிருப்பது பேட்டரியின் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் பேட்டரி ஆயுட்காலம் குறையும். அதற்கு பதிலாக பகல் நேரங்களில் அளவோடு சார்ஜ் செய்து கொள்வது பேட்டரி ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும். மேலும் பேட்டரி 80 சதவீத சார்ஜை எட்டியவுடன் அதனை சார்ஜில் இருந்து எடுத்து விடுவது நல்லது.

வெப்பநிலை

அதிகபடியான வெப்பநிலை பேட்டரியின் செயல்திறனை கட்டாயம் பாதிக்கும். எனவே முடிந்த அளவு சூரிய ஒளியிலிருந்து அல்லது அதிக குளிரான சூழ்நிலைகளில் இருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை தள்ளி வைப்பது நல்லது. மேலும் உங்களது ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெப்பமடைவதாக உணர்ந்தால், அதன் பேக் கேஸை (Back Case)-ஐ கழற்றி விடுவது நல்லது. இது அதிக வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க உதவும்.

தரமான சார்ஜர்களை உபயோகிக்க வேண்டும்:

அந்தந்த நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட தரமான ஒரிஜினல் சார்ஜர்களையே எலக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்ய பயன்படுத்த வேண்டும். இதற்கு பதிலாக மூன்றாம் தரப்பு டூப்ளிகேட் சார்ஜர்களை பயன்படுத்துவதால் பேட்டரியில் பாதிப்புகள் ஏற்படலாம். தரமான சார்ஜர்களை பயன்படுத்துவது பேட்டரியின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும்.

சாஃப்ட்வேர் அப்டேட்

அந்தந்த நேரங்களில் அந்தந்த நிறுவனங்களால் அளிக்கப்படும் சாஃப்ட்வேர் அப்டேட்டுகளை உடனுக்குடன் அப்டேட் செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இது பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்க உதவும். மேலும் தற்போதைய லேட்டஸ்ட் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதன் மூலம் பல்வேறு விதமான நன்மைகளையும் நீங்கள் பெற முடியும்.

முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் அறிக்கையின்படி, சரியான முறையில் சார்ஜிங் வழிமுறைகளை பின்பற்றுபவர்களின் பேட்டரி மற்றவர்களை விட 20% அதிக ஆயுட்காலத்தை பெறுவதாக தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அதிக ஆயுட்காலத்தை பெறுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Trending News
Recent News
Prev
Next