அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? - சீமான் முன் வைத்த கேள்வி இதுதான்!

is-deputy-cm-of-tamilnadu-can-only-be-found-in-karunandhi-house-asks-seeman
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-19 22:14:00

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் கருணாநிதி வீட்டில் தான் இருக்கிறாரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சியை பார்த்து பல கட்சிகள் மிரண்டு போய் உள்ளதாகக் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் எட்டு சதவீத வாக்குகளை இவர்கள் எப்படி வாங்கினார்கள் என்று அனைவரும் திகைத்துப் போய் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த நாட்டை யார் யாரோ ஆளும்போது நாங்கள் ஆள முடியாதா என கேள்வி எழுப்பினார்.

இல்லாத தேசியம், இல்லாத திராவிடத்தை வைத்துக்கொண்டு திராவிட கொள்கை என்று பேசுகின்றனர் என்றும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 24 லட்சம் ஓட்டுக்களை பெற்றதாகவும், மற்ற கட்சிகள் ஓட்டுக்களை வாங்கியதாகவும் தெரிவித்தார். 2 -3 சீட்டு, பணம் என மண்டியிட்டு வாழ்வதை விட தனித்து நின்று போராடி தோற்றுபோவதே மேல் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இவ்வளவு பெரிய நாட்டில் இல்லாத ஒரு துணை முதலமைச்சர், கருணாநிதி வீட்டில் தான் இருக்கிறாரா? என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழக முதல்வர் அமெரிக்கா சென்று வந்து ரூ.7500 கோடி ரூபாய்க்கு முதலீடு, வேலைவாய்ப்பு கொண்டு வந்துள்ளேன் என்று கூறுகிறார். ஏற்கனவே முதலீடு இருப்பதற்காக வெளிநாடு சென்றீர்களே, என்ன முதலீடு வந்துள்ளது? என வினவினார்.

மேலும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மாற்றப்படும், தமிழ்நாடு அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர சின்னம் மாற்றப்படும் என்றும் சீமான் தெரிவித்தார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next