கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்! பணி தொடர்வதற்கான தேதி அறிவிப்பு...

protesting-resident-doctors-in-westbengal-to-call-off-their-demonstration-at-swasthya-bhawan-on-friday-and-will-resume-emergency-services-from-saturday
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-19 22:37:00

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் பணிகளை தொடர்வோம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஆக. 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து உரிய நீதி வேண்டி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், 5 முறை பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இதனிடையே செப். 16 இரவு முதல்வர் மமதா பானர்ஜி - இளநிலை மருத்துவக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் மருத்துவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட 5 கோரிக்கைகளை முழுமையாக ஏற்கவில்லை என்றாலும், 3 கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி, மேற்கு வங்க மருத்துவப் பணிகள் இயக்குநர் தேபாசிஷ் ஹல்தார் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் கெளஸ்தவ் நாயக், கொல்கத்தா வடக்கு மண்டல துணை காவல் ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை முடிப்பது குறித்து பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு செய்வோம் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  சனிக்கிழமை முதல் பணிகளை தொடர்வோம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News
Recent News
Prev
Next