தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதிக மழைப்பொழிவு... மகிழ்ச்சி செய்தி சொன்ன வானிலை ஆய்வாளர்!

meteorologist-explanation-on-when-will-the-heat-subside-in-tamil-nadu
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-20 07:32:00

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதிக மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

கோடைக்காலத்துக்கு நிகராக தமிழ்நாடு முழுவதும் வெப்பம் வாட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பம் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகரித்துவரும் அதே வேளையில் மழையின் அளவு குறைந்தது. தமிழகத்தில் நேற்று (செப்.19) மட்டும் மதுரை உட்பட 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகியது. அதிகப்பட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.46 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியது. தமிழகத்தில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் நியூஸ்18க்கு பிரத்யேக பேட்டி அளித்த தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், ஆகஸ்ட் 2-ஆவது வாரத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் மழை குறைவாக பெய்துள்ளது என்றும் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் மழையின் அளவு குறைந்துள்ளதாகவும் கூறினார்.

செப்டம்பர் கடைசி வாரத்தில் இலங்கை அருகே மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதாக பிரதீப் ஜான், தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதிக மழை பெய்யும் என்றார்.

இதனிடையே, செப்டம்பர் 25-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் ஓரிரு இடங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next