தனுஷின் அடுத்த படத்தின் பெயர் 'இட்லி கடை' - இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!

cinema-dhanush-has-named-his-53rd-film-as-idli-kadai
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-19 19:48:00

தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள 4வது படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ், இந்தி, ஹாலிவுட் என தனது அசாத்திய நடிப்பால் உச்சம் தொட்டு வருகிறார் நடிகர் தனுஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான 50வது படம் ‘ராயன்’. மேலும் ‘பவர் பாண்டி’ படத்தில் இயக்குநராக அறிமுகமான தனுஷின் இயக்கத்தில் வெளியான ‘ராயன்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் படமாக வசூலை குவித்தது.

‘ராயன்’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் கோல்டன் ஸ்பாரோவ் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘குபேரன்’ படத்தில் நடித்து வரும் தனுஷ், தற்போது தனது 52வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தனுஷின் 52வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுவருகிறது. படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ளது. மிகவும் எளிமையாக அமைந்துள்ள படத்தின் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News
Recent News
Prev
Next