தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில்.. அதிகபட்ச வெப்பநிலை எங்கு தெரியுமா?

madurai-airport-recorded-a-temperature-of-103-degrees-fahrenheit
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-19 20:47:00

தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியிருந்தது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (19ம் தேதி) முதல் வரும் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று (18ம் தேதி) நள்ளிரவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது.

அதேபோல், தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (19.09.2024 மற்றும் 20.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை பொறுத்தவரையில், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக மதுரையில் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் 103.46 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி மதுரை உட்பட 7 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

Trending News
Recent News
Prev
Next