“பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும்” - பாஜகவின் ஹரியானா தேர்தல் அறிக்கை!

haryana-bjp-released-its-manifesto-what-all-the-special-things-it-contain
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-19 22:03:00

ஹரியானா மாநிலத்தில் தனது தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு வரும் அக். 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவும், அக். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. கடந்த 2019 தேர்தலில் மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது.

இந்தக் கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முறிவுற்றது. கூட்டணி ஆட்சி இருந்தபோது ஹரியானா மாநில முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் பதவி வகித்தார். கூட்டணி முறிவு ஏற்பட்ட பின் நயாப் சிங் சைனி மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த பின்னணியில் தற்போது 2024 சட்டமன்றத் தேர்தல் அங்கு நடைபெறவுள்ளது.

ஹரியானா தேர்தலுக்கான வாக்குறுதிகளை சமீபத்தில் காங்கிரஸ் அறிவித்தது. அதில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 2ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும், 300 யூனிட் இலவச மின்சாரம், 500 ரூபாய்க்கு சமையால் எரிவாயு வழங்கப்படும் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில், பா.ஜ.க.வும் ஹரியானா மாநிலத்திற்கான தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் 2,100 ரூபாய் வழங்கப்படும். சிலிண்டர் ஒன்று 500 ரூபாய்க்கு வழங்கப்படும், அக்னிவீர் திட்டத்தில் ஹரியானாவைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப்பணிகளுக்கான உத்தரவாதம் அளிக்கப்படும் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பிடித்துள்ளன.

Trending News
Recent News
Prev
Next