புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த 6 வழிகள்!

before-applying-for-a-new-credit-card-heres-how-you-can-raise-your-credit-score
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 16:57:00

நீங்கள் ஒரு புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் ஒரு கார்டை வாங்குவதற்கு போதுமான கிரெடிட் ஸ்கோரைப் பெற மிகவும் சிரமப்படுகிறீர்களா? சரி, இந்த பிரச்சனை மிகவும் பரவலாக எல்லாருக்கும் உள்ளது.

சிபில் (CIBIL) ஸ்கோர் என்றும் அழைக்கப்படும் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அதற்கான உண்மையான காரணத்தை நீங்கள் அறிந்தவுடன், அதை சரிசெய்யலாம். முதலாவதாக, உங்கள் கிரெடிட் அறிக்கைக்கான அணுகலைப் பெற வேண்டும். மேலும் அதில் தவறு ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

இதற்கு மாற்றாக, உங்கள் கிரெடிட் கார்டு பில் செலுத்துவதை நீங்கள் தவறவிட்டிருக்கலாம் அல்லது உங்கள் கடன் இஎம்ஐ தொகையை கட்டாமல் தவிர்த்திருக்கலாம;. அல்லது நீங்கள் இப்போதுதான் வருவாய் ஈட்ட ஆரம்பித்து, இன்னும் நல்ல கிரெடிட் ஸ்கோரை உருவாக்காமல் இருக்கலாம். இதை நினைத்து பீதி அடைய வேண்டியதில்லை.

புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த, நீங்கள் பின்பற்றக்கூடிய சில பரிந்துரைகளை தர உள்ளோம்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த 6 முக்கிய வழிகள்:

உங்கள் நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்துங்கள்:

தாமதமாக பணம் செலுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை கணிசமாக பாதிக்கும். எனவே, கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட பில்களை சரியான நேரத்தில் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

புதிதாக கடன் கேட்பதை தவிர்க்கவும்:

ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாக கடன் பெற விசாரணையை மேற்கொள்ளும்போது, ​​உங்கள் கிரெடிட் ஸ்கோர் ஓரளவு பாதிக்கப்படும். எனவே, முற்றிலும் அவசியமானதாக இல்லாவிட்டால், புதிய கடன் விசாரணையைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

பழைய கணக்குகளை பராமரிக்க முயற்சி செய்யுங்கள்:

பழைய கிரெடிட் கணக்கு எவ்வளவு காலம் பராமரிக்கப்படுகிறதோ, அவ்வளவு சிறப்பானதாக இருக்கும். நீங்கள் பழைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தாததால், அதை முற்றிலும் மூடக்கூடாது. உங்கள் பழைய கிரெடிட் கணக்கை மூடும்போது, ​​உங்கள் கடன் வரம்பு பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

பாதுகாக்கப்பட்ட கிரெடிட் கார்டு:

பாதுகாப்பான கிரெடிட் கார்டு என்பது உங்களுக்கு சமமான தொகையை அடமானமாக வைப்பதன் மூலம் கிடைக்க கூடியது. சிறந்த கிரெடிட் புரொஃபைலை உருவாக்க இது ஒரு நல்ல மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வழியாகும்.

கிரெடிட் கார்டு கடனைக் குறைக்கவும்:

சிறந்த கிரெடிட் பயன்பாடு விகிதத்தை பராமரிக்க, கிரெடிட் கார்டு கடனை மொத்த கிரெடிட் கார்டு வரம்பில் 30 சதவீதத்திற்கு கீழ் வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது. உதாரணமாக, உங்கள் கடன் வரம்பு ரூ.10 லட்சமாக இருந்தால், உங்கள் கிரெடிட் கடனை ரூ.3 லட்சத்துக்குக் குறைவாக வைத்திருக்க முயற்சிக்கவும்.

கடன் ரிப்போர்ட்டை தவறாமல் சரிபார்த்தல்:

உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை தவறாமல் சரிபார்ப்பது முக்கியம். அதாவது வருடத்திற்கு ஒரு முறையாவது. கடன் ரிப்போர்ட்டை சரிபார்த்து, ஏதேனும் தவறுகளைக் கண்டால், அவற்றைத் திருத்த முயற்சிக்கவும்.

Trending News
Recent News
Prev
Next