வெஸ்ட் இண்டீசிலிருந்து டெல்லி புறப்பட்டது இந்திய அணி... நாளை மும்பையில் வெற்றிக் கொண்டாட்டம்...

cricket-indian-cricket-team-will-celebrate-world-cup-victory-in-mumbai-on-tomorrow-official
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 17:54:00

உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டு உள்ளது. நாளை பொதுமக்கள் மத்தியில் பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. 20 அணிகள் மோதிய இந்த போட்டியில் இந்திய அணி கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

11 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா கைப்பற்றக்கூடிய ஐசிசி கோப்பை இதுவாகும். இதேபோன்று 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர், சுமார் 17 ஆண்டுகள் கழித்து இந்தியா டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணி தாயகம் திரும்ப பிசிசிஐ தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது.

முன்னதாக வெஸ்ட் இண்டீசின் பார்படோசில் சூறாவளிக்காற்று வீசியதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்திய வீரர்கள் தனி விமானத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி நாளை காலை இந்திய அணி டெல்லி வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை இந்திய அணி வீரர்கள் நேரில் சந்திக்கின்றனர்.

அதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி காலை உணவு அருந்துவார் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் மாலை 4 மணி அளவில் மும்பை நரிமண் பாயிண்டில் இருந்து வான்கிடே மைதானம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்ட பேரணி நடத்தப்பட உள்ளது. இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next