ஹர்பஜன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!

cricket-harbhajan-singh-net-worth-salary-car-collection-endorsement-house-celebrating-his-birthday-today
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 18:44:00

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் சொத்து மதிப்பு மற்றும் அவருக்கான வருமான ஆதாரங்களை பார்த்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியமடைவீர்கள்.

உலகின் பிரபல பேட்ஸ்மேன்களை தனது சுழலில் சிக்க வைத்து வீழ்த்திய ஹர்பஜன் சிங்கை யாருக்குத்தான் தெரியாது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்த ஹர்பஜன் சிங், இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திறமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்.

சிறு வயதில் தந்தையின் மறைவுக்கு பிறகு குடும்பத்தின் பொறுப்பு அவரது தோளில் விழுந்தது. எனவே, முதலில் குடும்ப வருமானத்திற்காக டிரக் ஓட்டுநராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவரது சகோதரிகளின் உந்துதலால் கிரிக்கெட் வீரராக மாறினார் ஹர்பஜன் சிங்.

இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஹர்பஜன் சிங், ஓய்வுக்குப் பிறகு பல வழிகளில் இருந்து வருமானங்களை ஈட்டி வருகிறார்.

2024ஆம் ஆண்டில் ஹர்பஜன் சிங்கின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.70 கோடி. கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனை செய்வது மட்டுமின்றி, அவருக்கு பிற வருமானங்களும் வருவதால், 2021 முதல் அவரது நிகர சொத்து மதிப்பில் இருந்து 40% லாபம் கிடைத்துள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் தக், ஸ்போர்ட்ஸ்கீடா மற்றும் ஜீ போன்ற ஊடகங்களில் வர்ணனையாளராக பணியாற்றும் ஹர்பஜன் சிங் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.6 கோடியை சம்பளமாக வாங்குகிறார். 2021 முதல் அவரது நிகர சொத்து மதிப்பு 40% அதிகரித்து வருவதாகவும், 2023ஆம் ஆண்டில் அவரது மாதச் சம்பளம் ரூ.50 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் ஹர்பஜன் சிங் இருக்கிறார். ராஜ்ய சபா எம்.பி.க்கு அலவன்ஸ் உள்பட மாதத்திற்கு ரூ.1.90 லட்சம் வழங்கப்படுகிறது. மறுபுறம் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்கும் ஹர்பஜன் சிங் மாதத்திற்கு ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.

மும்பை, சண்டிகர், மொகாலி, ஜலந்தர், அகமதாபாத் மற்றும் ஆந்திராவின் நல்கண்டா ஆகிய இடங்களில் ரூ.59 கோடி மதிப்பிலான சொத்துகளை வைத்திருக்கும் ஹர்பஜன் சிங், சண்டிகரில் ரூ.7 கோடி மதிப்பிலான வீட்டில் வசிக்கிறார். அவரது மனைவிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான வீடு உள்ளது. கார் பிரியரான ஹர்பஜன் சிங், SUV ஹம்மர், ஃபோர்டு எண்டீவர், மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட பல கார்களை வைத்துள்ளார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next