ஐபோன் யூசர்களுக்கு வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள செம சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா?

whas-the-surprise-that-whatsapp-has-brought-to-iphone-users-nw-kpk-ghta-ws-a
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-23 17:54:00

வாட்ஸ்அப் என்பது ஒரு மெசேஜ் அப்ளிகேஷனாக மட்டுமல்லாமல் காலிங் அப்ளிகேஷன் மற்றும் இன்னும் எக்கச்சக்கமான நன்மைகளை அதன் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அவ்வப்போது புதுப்புது அம்சங்களை வெளியிட்டு யூசர்களை சர்ப்ரைஸ் செய்யும் பழக்கம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உண்டு. அந்த வகையில் கூடிய விரைவில் ஐபோன் யூசர்களுக்கு டயலர் டேப் அம்சத்தை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது சொந்தமாக ஒரு டயலர் அப்ளிகேஷன் இருப்பதன் மூலமாக வாட்ஸ்அப் மெசேஜிங் அப்ளிகேஷன் மூலமாகவே பிறருக்கு போன் செய்யலாம். ஆனால் நீங்கள் போன் செய்யும் நபரிடம் வாட்ஸ்அப் அக்கவுண்ட் இருக்க வேண்டும். இது தேவையில்லாத அம்சம் என்று பலர் நினைத்தாலும், போன் கால்கள் உட்பட உங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் ஒரு ஒன் ஸ்டாப் ஹப்பாக வாட்ஸ்அப் செயல்பட வேண்டும் என்பதே மெட்டா நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

வாட்ஸ்அப்பில் ஐபோன் டயலர் அப்ளிகேஷன் வெளியாக இருக்கும் இந்த அம்சம் குறித்த விவரங்கள் இந்த வாரத்தில் WaBetaInfo -இல் வெளியானது. அதன்படி, வாட்ஸ்அப்பில் உள்ள ‘+’ ஐகானை கிளிக் செய்வதன் மூலமாக உங்களால் டயலர் அப்ளிகேஷனை திறக்க முடியும். இதே போன்ற அம்சங்கள் ஏற்கனவே ஆண்ட்ராய்டு வெர்ஷனில் கிடைக்கிறது. தற்போது இந்த அம்சத்தை ஐபோன் பயனர்களுக்காகவும் வெளியிடுவதற்கு நிறுவனம் தயாராக உள்ளது.

சொந்தமாக டயலர் அப்ளிகேஷன் இருக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் யூஸர்கள் கூகுள் மற்றும் ஆப்பிள் வழங்கியுள்ள டீஃபால்ட் டயலரை இனியும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதுவே ஆண்ட்ராய்டு யூசர்களை பொறுத்தவரை, தங்களுடைய டீஃபால்ட் காலிங் அல்லது மெசேஜ் அப்ளிகேஷனாக பயன்படுத்துவதற்கு தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. கூடிய விரைவில் ஐபோன் யூசர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்த ஆப்ஷனை வழங்க உள்ளது. புதிய iOS 18.2 மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகளில் இந்த ஆப்ஷனை ஐபோன் யூஸர்கள் எதிர்பார்க்கலாம்.

இந்த ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்தும் பொழுது நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு போன் காலும் வாட்ஸ்அப் காலாக தான் இருக்கும். இது பெரும்பாலான நாடுகளில் சிறந்த ஆப்ஷனாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் மக்களுக்கு ஃபீச்சர் போன்கள் என்பது இன்னும் ஒரு மிகப்பெரிய விஷயமாகவே இருக்கிறது. இதனால் வாட்ஸ்அப் டயலர் ஆதரவு ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்காது.

இது தவிர வாட்ஸ்அப் நிறுவனம் அதன் போன் காலிங் அம்சத்தில் ஒரு சில புதிய அப்டேட்டுகளை சமீபத்தில் சேர்த்துள்ளது. இதன் மூலமாக யூசர்கள் அதிக ரெசல்யூசனில் வீடியோ கால்களை பேசலாம். மேலும் ஒரு குரூப்பில் உள்ள நபருக்கு தனியாக போன் கால் செய்யும் ஆப்ஷனும் யூசர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் எக்கச்சக்கமான ஆப்ஷன்கள் இந்த அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ads
Recent Technology News
Trending News
Recent News
Prev
Next