தோனியின் உதவியுடன் ரூ.4500 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கிய நபர்.. யார் இவர்?
கர்நாடகாவின் பெங்களூருவை தளமாகக் கொண்ட கட்டாபுக் (Khatabook) நிறுவனம், வணிக உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் கணக்குகளை நிர்வகிப்பதற்கும், ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கும் உதவிகரமாக இருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காண முடிகிறது. இது புதுமை மற்றும் தொழில்முனைவோரின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் காட்டுகிறது. தொழில்முனைவோர், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னோடியான யோசனைகளுடன் புதுப்புது நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். அவை குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக மக்களின் அன்றாட வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
கட்டாபுக் (Khatabook), நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்களின் கணக்குகளை பராமரிக்க உதவும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாகும், ஆஷிஷ் சோனோன், தனேஷ் குமார், வைபவ் கல்பே, ஜெய்தீப் பூனியா மற்றும் ரவிஷ் நரேஷ் ஆகியோரால் 2018 இல் நிறுவப்பட்டது. கர்நாடகாவின் பெங்களூருவை தளமாகக் கொண்ட கட்டாபுக் நிறுவனம், வணிக உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் கணக்குகளை நிர்வகிப்பதற்கும், ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கும் உதவிகரமாக இருக்கிறது. வணிகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பின்பற்றி வரும் பாரம்பரிய கையேடு கணக்கியலில் இருந்து, டிஜிட்டல் உலகுக்கு மாறுவதற்கு இந்த ஸ்டார்ட்அப் முக்கிய பங்கு வகிக்கிறது.
கைட் டெக்னாலஜிஸ் (Kyte Technologies) உருவாக்கியிருக்கும் கட்டாபுக் ஆப், வணிகர்கள் தங்களது பங்குகளின் பதிவுகளை நிர்வகிக்க எளிதான வழியை வழங்குகிறது. இந்த ஆப்பின் மூலம் பயனர்கள், கணக்குகளை சுமூகமாக கையாளலாம் மற்றும் கடன் நிலுவைகளையும் கண்காணிக்கலாம். கட்டாபுக் இலவச சேவை மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரவிஷ் நரேஷ், கட்டபுக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். புகழ்பெற்ற ஐஐடி பாம்பேயில் பட்டம் பெற்ற இவர், முன்பு ஹவுசிங் டாட்காமின் (Housing.com) இணை நிறுவனர் மற்றும் சிஓஓ-ஆக இருந்தார்.
பிசினஸ் அவுட்ரீச்சின் கூற்றுப்படி, ரவிஷ் மற்றும் அவரது குழுவினர் இந்தியர்களிடையே ஒரு சுவாரஸ்யமான போக்கைக் கண்காணித்தனர். பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எளிதாக மாறி வரும் நிலையில், பலர் தங்கள் கணக்குகளை நோட்டில் கைமுறையாக பதிவு செய்யும் பாரம்பரிய முறைகளை பின்பற்றி வருகின்றனர்.
இந்த முறை, ஆன்லைன் கணக்கியலுக்கு (அக்கவுண்ட்சுக்கு) மாறுவதற்கு தனிநபர்களை ஊக்குவிக்க ஒரு மென்மையான தீர்வை உருவாக்க வழிவகுத்தது. இதனால், கட்டாபுக் செயலி உருவாக்கப்பட்டது. அதன் தொடக்கத்திலிருந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனி உட்பட பல ஆதரவாளர்களிடமிருந்து கட்டாபுக் முதலீடுகளை ஈர்த்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், நிறுவனம் ரூ.4500 கோடி ரூபாய் மதிப்பீட்டை அடைந்தது.