விவசாயத்துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது - பிரதமர் மோடி
புதுடெல்லி,
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பது அவசியம். இந்த பொறுப்பு நாட்டின் கல்வி முறைக்கு உள்ளது, அதனால்தான் பல தசாப்தங்களாக நவீனத்தின் அவசியத்தை நாடு உணர்ந்துள்ளது. முன்னதாக கிராமப்புற தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு மொழி பெரும் தடையாக இருந்தது, ஆனால் இப்போது அப்படி அல்ல. தாய் மொழியில் கற்பித்தல் மற்றும் தேர்வுகளை நடத்தும் கொள்கையை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்று எங்கள் அரசாங்கம் இளைஞர்களுக்கு 13 வெவ்வேறு மொழிகளில் ஆட்சேர்ப்பு தேர்வை எழுதும் வாய்ப்பை வழங்கியுள்ளது. விவசாயத்துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், இன்று ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற பெண்களுக்கு ஊக்கமளிக்கும். பெண்களை எல்லா துறைகளிலும் தன்னிறைவு பெற செய்வதே எங்கள் முயற்சி. 26 வார மகப்பேறு விடுப்பு வழங்கும் முடிவு கோடிக்கணக்கான பெண்களில் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளது. எங்கள் அரசாங்கம் 30 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்குகளை திறந்துள்ளது, இது அவர்கள் அரசாங்கத் திட்டங்களிலிருந்து நேரடியாக பயனடைவதை உறுதி செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.