குஜராத் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவு

37-magnitude-tremor-hits-gujarats-kutch-no-casualty
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 20:10:00

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக குஜராத்தின் காந்திநகரை சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்ச் மாவட்டத்தின் லக்பட் நகரத்திற்கு வடக்கு-வடகிழக்கிலிருந்து 76 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிரி சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News
Recent News
Prev
Next