புரோ கபடி லீக்; தபாங் டெல்லி - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்

pro-kabaddi-league-dabang-delhi-gujarat-giants-teams-clash-today
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 12:56:00

புனே,

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.

இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் தபாங் டெல்லி 3வது இடத்திலும், புனேரி பால்டன் 8வது இடத்திலும், தமிழ் தலைவாஸ் 9வது இடத்திலும், குஜராத் ஜெயண்ட்ஸ் 11வது இடத்திலும் உள்ளன.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next