நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பார் - இங்கிலாந்து முன்னாள் வீரர்

nathan-mcsweeney-to-return-to-australia-squad-former-england-player
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 18:09:00

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் அறிமுகம் ஆன நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கான்ஸ்டாஸ் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதமடித்திருந்தார். அதன் காரணமாக அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியில் நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் இடம் பிடிப்பார் என இங்கிலாந்து முன்னார் வீரர் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாதன் மெக்ஸ்வீனியைப் போன்று யாருக்கும் கிரிக்கெட் பயணம் கடினமாக தொடங்கியிருக்காது என நினைக்கிறேன். அந்த அளவுக்கு மெக்ஸ்வீனியின் கிரிக்கெட் பயணம் கடினமாக தொடங்கியுள்ளது. அவருக்காக நான் வருத்தப் படுகிறேன்.

ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருக்கும் கொடுக்கப்படாத மிகப் பெரிய சவால் அவருக்கு வழங்கப்பட்டது. பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட் செய்வது, பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது போன்ற சவாலான விஷயங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மெக்ஸ்வீனி ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவார் என நினைத்தேன்.

அந்தப் போட்டியில் அவர் சரியாக விளையாடாத பட்சத்தில், அணியில் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எண்ணினேன். மெக்ஸ்வீனி அணியிலிருந்து நீக்கப்பட்டத்தை அவருக்கு பின்னடைவாக நான் பார்க்கவில்லை. ஆஸ்திரேலிய அணியின் இந்த முடிவு மெக்ஸ்வீனிக்கு எதிர்காலத்தில் நன்மையானதாகவே அமையும். அவர் எதிர்காலத்தில் 4-வது அல்லது 5-வது வீரராக களமிறங்கி சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next