ஃபீஸ் செலுத்தாத மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. இப்படியும் ஒரு பள்ளியா? பெற்றோர் விளாசல்

school-locks-students-in-dark-room-over-unpaid-fees-in-bengaluru-nw-vjr
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-22 19:27:00

கல்வி கட்டணம் செலுத்தாததால் பள்ளியில் மாணவர்களை இருட்டு அறையில் அடைத்து வைத்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஆர்க்கிட் இன்டர்நேஷனல் பள்ளி, கல்வி கட்டணம் செலுத்தாததால் மாணவர்களுக்கு இதுபோன்ற தண்டனையை வழங்கியது, இது அவர்களுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால், பெற்றோர் மத்தியில் கடும் கோபம் எழுந்ததுடன், குழந்தைகளின் செயல்பாட்டில் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பள்ளி ஊழியர்களின் நடத்தை குழந்தைகளை மோசமாக பாதிக்கிறது. இது போன்ற மோசமான தண்டனைகள் காரணமாக குழந்தைகளின் அறிவு மற்றும் மனநலம் சீர்குலைந்து வருவதாக பெற்றோர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதுபற்றி குழந்தைகள் பெற்றோரிடம் கூறினால் அதிக டார்ச்சர் கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த தனியார் பள்ளியை ஆய்வு செய்து குழந்தைகளை இருட்டறையில் அடைத்து வைத்த இது போன்ற பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்து, பிளாக்லிஸ்ட்-இல் சேர்க்க வேண்டும் என பெற்றோர்கள் கல்வித்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளனர். இதுவரை, கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 6 குழந்தைகள் நாள் முழுவதும் லைட் இல்லாமல் நூலகத்தின் இருட்டு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த புகார்கள் குறித்து பல பெற்றோர்கள் கல்வித்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளனர். பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்து, பிளாக்லிஸ்ட்-இல் சேர்க்க, பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான தண்டனை குழந்தைகளின் உரிமை மீறல் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

கல்வித்துறை என்ன சொல்கிறது?

கட்டணம் செலுத்தாமல் மாணவர்களை துன்புறுத்தும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களின் மன நிலை மற்றும் படிப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து உள்ளூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் இதுபோன்ற புகார்கள் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, பிளாக்லிஸ்ட்-இல் சேர்க்கப்படும். அறிக்கையின் படி, கடந்த இரண்டு வாரங்களில் ஆறு மாணவர்கள் வெளிச்சம் இல்லாத இருட்டு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டுகளுக்கு பள்ளி மறுப்பு

ஆர்க்கிட் இன்டர்நேஷனல் பள்ளியைத் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை குறித்து கருத்து கேட்டபோது, பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது மற்றும் ஆதாரமற்றது என்று கூறியது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெட்டிசன்கள் கருத்து

இது குறித்து ஒருவர் கூறியதாவது, பள்ளி நிர்வாகத்தின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இன்னொருவர், பள்ளி நிர்வாகத்தை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றார் கூறியுள்ளார். மற்றொருவர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் முறையிட்டு, பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next