பிரிட்டன் தேர்தல் பன்முகத்தன்மை வாய்ந்த நாடாளுமன்றத்தை அமைக்குமா?

will-britains-election-produce-a-more-diverse-parliament
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-04 18:48:00

பிரிட்டன் வரலாற்றில் இன்று நடக்கும் பொதுத்தேர்தல் மூலம் ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த நாடாளுமன்றம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்கள் எண்ணிக்கையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நிலையில், பிரிட்டன் தனது முதல் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. சுமார் 4 கோடியே 65 லட்சம் பிரிட்டன் மக்கள் வாக்களிக்கும் இந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியரான ரிஷி சுனக் மீண்டும் பிரதமர் ஆவாரா அல்லது பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் க்யர் ஸ்டாமர் ஆட்சியை பிடிப்பாரா? என்பது தெளிவாகி விடும்.

ரிஷி சுனக் அல்லது க்யர் ஸ்டாமர் ஆகிய இருவரில் யார் பிரிட்டன் பிரதமராக வந்தாலும், அமைய உள்ள புதிய நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது மக்கள்தொகைக்கு ஏற்ப அனைத்துத் தரப்பைச் சேர்ந்த எம்பிகளும் இடம்பெறவுள்ளனர். இத்தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக் தோல்வியடைந்து லேபர் கட்சி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

பிரிட்டன் கீழவையான மக்களவையில் மொத்தமுள்ள 650 எம்.பி. இடங்களுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 107 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் CONSERVATIVE கட்சியில் 30 வேட்பாளர்களும், Labour கட்சி சார்பில் 33 வேட்பாளர்களும், Liberal Democrat கட்சி சார்பில் 11 பேரும் இந்திய வம்சாவளி வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பிரதான கட்சிகளைத் தவிர்த்து பிற அரசியல் கட்சிகள் சார்பில் 14 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

குறிப்பாக, CONSERVATIVE கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்ட இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் 23 பேர் புது முகங்கள். இதற்கு சற்றும் சளைக்காத வகையில், 26 புதுமுக இந்திய வம்சாவளி எம்.பி.க்களை Labour கட்சியும் களமிறக்கியுள்ளது. இதுஒருபுறம் என்றால், பிரிட்டனில் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தில் வசிக்கும் இலங்கை வம்சாவளி தமிழர்களும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

குறிப்பாக Sutton & chem தொகுதியில் Labour கட்சி வேட்பாளராக க்ருஷ்ணி ரிஷிகரன் போட்டியிடுகிறார். Hamble valley தொகுதியில் இலங்கை வம்சாவளி தமிழரான டெவினா பால் என்பவரும் Labour கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மற்றொரு இலங்கை வம்சாவளி தமிழ் எம்.பி.யான கவின் ஹரன் Southend East & Rochford தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர்களைத் தவிர உமா குமரன், மயூரன் செந்தில்நாதன், கமலா குகன், ஜாஹிர் உசேன் உள்ளிட்ட 8 தமிழ் வம்சாவளியினர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

குறிப்பாக Islington North தொகுதியில் இந்திய வம்சாவளி வேட்பாளரான Praful Nargund Labour கட்சி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல், Iford South தொகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த Jas Athwal போட்டியிடுகிறார். இதேபோல், Derby South தொகுதியில் Baggy ஷங்கெரும், Southampton தொகுதியில் Satvir Kaur என்பவரும், Huddersfield தொகுதியில் Harpreet Uppal என்ற இந்திய வம்சாவளி வேட்பாளரும் களமிறக்கப்பட்டுள்ளனர். கிழக்கு லீசெஸ்டர் தொகுதியில் Labour கட்சியின் Rajesh Agrawal, Conservative கட்சியின் Shivani Raja-வை எதிர்த்து போட்டியிடுகிறார். மத்திய பிரதேசத்தில் பிறந்து இந்தியாவிலேயே வளர்ந்த Rajesh Agrawal, சரளமாக இந்தி பேசுவார்.

இதேபோல் Labour கட்சி சார்பில் இந்திய வம்சாவளி சீக்கியரான Warinder Juss என்பவர், மேற்கு Wolverhampton தொகுதியிலும், Gurinder Singh Josan என்பவர், Smethwick தொகுதியிலும் Labour கட்சிக்கு வெற்றி தேடித் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகாரில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த Kanishka Narayan, பிரிட்டனின் Vale of Glamorgan தொகுதியில் CONSERVATIVE கட்சி வேட்பாளராக களம் காண்கிறார். இதுவரை அந்த தொகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த யாரும் எம்.பி.யாக தேர்வாகாத நிலையில், புதிய வரலாறை கனிஷ்கா நாராயண் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் Dudley தொகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த Sonia Kumar CONSERVATIVE கட்சி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இப்படி பிரிட்டனின் இரண்டு பிரதான கட்சிகளும் இந்திய வம்சாவளி வேட்பாளர்களை அதிக எண்ணிக்கையில் களமிறக்கி உள்ளதால், புதிய நாடாளுமன்றத்திலும், இந்திய வம்சாவளி மற்றும் இலங்கை தமிழர் எம்.பி.க்களின் குரல் வலுவாக ஒலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மற்றும் புலம்பெயர் இலங்கை தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இவர்கள் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next