Budget 2024 : பட்ஜெட்டில் மூத்த குடிமகன்களுக்கு மெகா சர்ப்ரைஸ்.. மத்திய அரசு முக்கிய முடிவு

budget-2024-ayushman-bharat-yojana-likely-to-be-extended
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-04 21:28:00

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவச சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு முதியவர்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையைப் பெற்று பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

இதன்படி, முதியோர் சிகிச்சைக்கான சுகாதார நலன் தொடர்பான திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆயோக்யா யோஜனா என்பது உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி சுகாதாரக் காப்பீட்டு திட்டமாகும். தற்போது 12 கோடி குடும்பங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்புக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வழங்குகிறது.

தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20% மட்டுமே மத்திய அரசின் சுகாதாரத் திட்டம், பணியாளர்கள் மாநிலக் காப்பீட்டுத் திட்டம், ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா, கூட்டுறவு சுகாதாரக் காப்பீடு, முதலாளிகளின் மருத்துவத் திருப்பிச் செலுத்துதல் அல்லது தனியார் காப்பீடு போன்ற சுகாதாரத் திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர்.

வயதான பெண்களுடன் (16.9%) ஒப்பிடும்போது வயதான ஆண்களுக்கு சற்று அதிகமான பாதுகாப்பு 19.7% இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே உள்ள கவரேஜில் குறைந்தபட்ச வேறுபாடு இருப்பதையும் இது குறிக்கிறது.

அத்துடன், 25,000 மக்கள் மருந்தகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next