அதிபர் தேர்தலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை - ஜோ பைடன் திட்டவட்டம்

i-am-the-democratic-party-nominee-no-one-pushing-me-out-biden
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-07-04 18:22:00

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஜோ பைடன் (வயது 81), குடியரசு கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் (வயது 78) ஆகியோர் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில் ஜோ பைடன் சிறப்பாக செயல்படவில்லை. அவர் பல இடங்களில் திணறினார். இதனால் அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று சொந்த கட்சியை சேர்ந்த சில எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நான் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர். யாரும் என்னை வெளியே தள்ளவில்லை. நான் வெளியேறவில்லை, நான் இறுதிவரை இந்த போட்டியில் இருக்கிறேன். இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெறப் போகிறோம். நவம்பரில் டொனால்ட் டிரம்பை தோற்கடிக்க எனக்கும், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு உதவுங்கள். நீங்கள் எத்தனை முறை வீழ்த்தப்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எவ்வளவு விரைவாக எழுந்திருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒரு நாடாக, நாம் வீழ்த்தப்படும்போது, மீண்டும் எழுவோம். நாம் கடினமாக உழைக்கிறோம்.

அதைத்தான் நான் செய்யப் போகிறேன். 2020-ம் ஆண்டு டிரம்பை தோற்க்கடித்தோம். 2024- ஆண்டில் அவரை மீண்டும் தோற்க்கடிக்கப் போகிறோம். ஆனால் அது எளிதாக இருக்காது. உங்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்ய எனக்கு நீங்கள் பின்னால் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறும்போது. அதிபர் தேர்தலில் இருந்து விலகுவது பற்றி ஜோபைடன் பரிசீலிக்கவில்லை என்றார்.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next