உலகின் பணக்கார முஸ்லீம் நாடு எது தெரியுமா? - யுஏஇ, சவூதி அரேபியா இல்லை...

did-you-know-richest-muslim-countries-in-the-world
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-04 16:40:00

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும், பணக்கார முஸ்லீம் நாடுகள் பட்டியலில் இந்த நாடுகள் பின் தங்கியுள்ளன. உண்மையில் பணக்கார முஸ்லீம் நாடு எது தெரியுமா?

மக்கள் தொகை அடிப்படையில் உலகின் 2வது பெரிய மதமாக இஸ்லாம் இருக்கிறது. இந்த மதத்தை சுமார் 190 கோடி பேர் பின்பற்றுகிறார்கள். அத்துடன், உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மதமாகவும் இஸ்லாம் இருக்கிறது. சவூதி அரேபியா மற்றும் இந்தோனேசியா உள்பட பல நாடுகளில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். ஆனால், இந்த இரு நாடுகளின் பொருளாதார நிலையும் கணிசமாக வேறுபடுகிறது.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் சில நாடுகள் மிகவும் செல்வ வளத்துடன் இருக்கும் நிலையில், மற்ற நாடுகள் மிகவும் ஏழ்மையில் இருக்கின்றன. எனவே, உலகின் மிகவும் பணக்கார முஸ்லீம் நாடுகள் குறித்து அறிந்து கொள்ளலாம். உலக அளவில் மிகவும் பணக்கார முஸ்லீம் நாடாக இருப்பது கத்தார். 17 லட்சம் மக்கள் தொகை கொண்ட கத்தாரில் 2011ல் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 88,919 டாலராக இருந்தது. இதனால், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக கத்தார் இருக்கிறது. கத்தாரின் செல்வம் பெருமளவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது.

கத்தாருக்கு அடுத்தபடியாக குவைத் உள்ளது. 35 லட்சம் மக்கள் தொகையுடன் இரண்டாவது பணக்கார முஸ்லீம் நாடான குவைத்தில் கடந்த 2011 கணக்கின்படி, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 54,664 டாலராக இருந்தது. மேலும் 104 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பு இருந்தது. குவைத்தின் பொருளாதாரம் கப்பல் மற்றும் கச்சா எண்ணெய் மூலம் வளமாக இருக்கிறது.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பணக்கார நாடு புருனே. 2010ல் புருனேயின் தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50,506 டாலராக இருந்தது. இது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறியது. 80 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களால் அதன் செல்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புருனே ஏற்றுமதி செய்வதில் 90 சதவீதம் ஹைட்ரஜன் வாயுதான். அத்துடன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் ஒன்பதாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், எண்ணெய் ஏற்றுமதியில் நான்காவது பெரிய நிறுவனமாகவும் இருக்கிறது.

பணக்கார நாடுகள் வரிசையில் 4வது இடத்தில் இருப்பது ஐக்கிய அரபு அமீரகம். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாய்பு ஏற்றுமதி மூலம் கணிசமான வருவாய் ஈட்டுகிறது. 849.5 பில்லியன் கன மீட்டர் வரை இயற்கை எரிவாயு இருப்புகள் மற்றும் தாமிரம், தங்கம், துத்தநாகம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க இருப்புகளுடன் ஐந்தாவது பணக்கார முஸ்லீம் நாடாக இருப்பது ஓமன். உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான சவூதி அரேபியா ஆறாவது இடத்தையும், பஹ்ரைன் 7வது இடத்திலும் உள்ளன. பணக்கார முஸ்லீம் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next