பிரிட்டனில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார்? கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

is-rishi-sunaks-rule-coming-to-an-end-what-do-british-election-predictions-say
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-04 17:20:00

பிரிட்டன் பொதுத்தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சிக்கு முடிவுக்கு வரும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பிரிட்டனில் 650 எம்.பி. இடங்களுக்கான பொதுத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 14 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது கன்சர்வேடிவ் கட்சி சார்பில், இந்தியா வம்சாவளியான ரிஷி சுனக் பிரதமராக இருக்கும் நிலையில், நடப்பு தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் 14 ஆண்டுகள் காத்திருந்த தொழிற்கட்சி ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது.

கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில், கடைசி நிமிடத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் பிரதமர் ரிஷி சுனக் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அதாவது, 14 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால், வரிகள் உயர்த்தப்படும் என்று எச்சரித்தார். ஆனால், ஆட்சி மாற்றமே தற்போதைய தேவை என்று தொழிற்கட்சியின் பிரதமர் வேட்பாளரான கீர் ஸ்டார்மர் கூறியுள்ளார். அத்துடன், கன்சர்வேடிவ் கட்சியின் எச்சரிக்கையை வாக்காளர் அடக்குமுறை என்றும் அவர் விமர்சித்தார்.

கன்சர்வேடிவ் கட்சியை தொழிற்கட்சி தோற்கடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், நம்பிக்கை மற்றும் வாய்ப்புக்கான வாசல் திறக்க இருப்பதாக கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசாங்கத்தை அமைக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்பார்த்ததை விட முன்னதாகவே தேர்தலை அறிவித்த ரிஷி சுனக், அண்மையில் பிரச்சார உத்தியை மாற்றினார். அதாவது, 5ஆவது முறையாக வெற்றியை தேடுவதற்குப் பதிலாக, தொழிற்கட்சி பெரும்பான்மை பெறுவதற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தார்.

சாதனைகளை சொல்வதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்ததால், அவர் கடந்த 2019 தேர்தலில் வெற்றிபெற்ற ரிச்மண்ட் மற்றும் நார்த்தெல்டன் தொகுதிகளில் தோல்வியடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next