நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து

director-mari-selvaraj-congratulates-actress-keerthy-suresh
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 21:35:00

சென்னை,

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் "ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன்" போன்ற படங்களில் நடித்து உள்ளார். 'நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார்.

தற்போது அட்லி இயக்கத்தில் உருவான 'பேபிஜான்' என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். கடந்த 12-ந் தேதி இவர்களின் திருமணம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.

இந்தசூழலில், புதுமணத் தம்பதி கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்,

"இந்த தருணத்திற்காக நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தீர்கள் என்று எனக்குத் தெரியும், அது இறுதியாக நடந்து விட்டது. உங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அன்பு எல்லா மகிழ்ச்சியாலும் கொண்டாட்டங்களாலும் நிரப்பப்படட்டும்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next