இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்; நியூசிலாந்து அணி அறிவிப்பு

new-zealand-squad-announced-for-t20-and-odi-series-against-sri-lanka
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 16:03:00

வெல்லிங்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மிட்செல் சாண்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி விவரம்: மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாம்ப்மென், ஜேக்கப் டபி, மிட்ச் ஹே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், ஜேக் போல்க்ஸ் (டி20 அணிக்கு மட்டும்), பெவன் ஜேக்கப்ஸ் (டி20 அணிக்கு மட்டும்), டிம் ராபின்சன் (டி20 அணிக்கு மட்டும்), டாம் லாதம் (ஒருநாள் அணிக்கு மட்டும்), வில் ஓ ரூர்க் (ஒருநாள் அணிக்கு மட்டும்), வில் யங் (ஒருநாள் அணிக்கு மட்டும்).

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next