7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

number-3-of-7-ports-storm-warning-cage-boom
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 15:51:00

சென்னை,

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது.

இது நாளை ஆந்திர - வடதமிழகம் கடற்கரையை நோக்கி நகரும் என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை நோக்கி நகரும்போது நாளை (டிச., 24-ம் தேதி) நாளை மறுநாள் (25-ம் தேதி) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிரொலியாக சென்னை, நாகை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next