தென்காசியில் தபால் பெட்டியை தூக்கி சென்ற நபரால் பரபரப்பு

there-is-a-stir-in-tenkasi-due-to-the-person-who-lifted-the-post-box
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 15:03:00

தென்காசி,

தென்காசி மாவட்டம் மேலகரம் தபால் நிலையம் முன்பிருந்த தபால் பெட்டியை நேற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நைசாக தூக்கி கொண்டு சாலையில் நடந்து சென்றார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.

மேலும் அந்த நபரிடம் இருந்து தபால் பெட்டியை மீட்க பொதுமக்கள் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தென்காசி போலீசார் விரைந்து சென்று, மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் இருந்த தபால் பெட்டியை மீட்டு சென்று மேலகரம் தபால் நிலையத்தில் மீண்டும் வைத்தனர்.

தபால் பெட்டியை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தூக்கி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next