பிக்பாஸ் போட்டியாளர்கள் மாறி மாறி குற்றச்சாட்டு.. யார் சொல்வது உண்மை? - அதகளமாகும் ட்விட்டர்!
பிக்பாஸ் 7வது சீசன் வெற்றியாளர் அர்ச்சனாவுக்கும், பைனலிஸ்ட் மாயாவுக்கும் இடையே எக்ஸ் பக்கத்தில் நிலவும் வார்த்தைப் போர் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நடிகை அர்ச்சனா, தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த சீசன் போட்டியாளர் ஒருவரின் ரசிகர் தனக்கு மிரட்டல் விடுப்பதாக தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த நடிகை மாயா, தாங்களும் கடந்த சீசன் போட்டியாளர் ஒருவரின் பிஆர் குழுவால் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மிரட்டப்பட்டதாக பதிவிட்டுள்ளார். மேலும், தற்போது வரை தங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்த மிரட்டல் தொடர்வதாகவும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், நடிகை அர்ச்சனா தனது மற்றொரு எக்ஸ் பதிவில், “மாயா உங்களது பதிவை தான் பார்த்ததாகவும், உங்களுக்கும் மற்றவர்களும் நடந்ததை நினைத்து தான் அனுதாபம் கொள்வதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த சீசன் போட்டியாளரின் பிஆர் குழு தனது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை” என பதிவிட்டுள்ளார். இப்படி இருவரும் மாற்றி மாற்றி பதிவிட்டு வரும் நிலையில், யார் சொல்வது உண்மை என தெரியாமல் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.