ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை இன்று அடைப்பு

rameswaram-ramanathaswamy-temple-entrance-closed-today
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 12:51:00

ராமேஸ்வரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்றிருக்கும் ராமநாதசுவாமி கோவில் ராமாயண வரலாற்று கதைகள் நிறைந்த புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட முக்கிய பகுதியாக உள்ளது.

இந்நிலையில் மார்கழி அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை இன்று அடைக்கப்படுகிறது. இதன்படி இன்று அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணி முதல் 4:00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

காலை 7 மணிக்கு சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும் என்பதால் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு, மீண்டும், சுவாமி - அம்பாள் கோவிலுக்கு வந்தவுடன் 12 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு உச்சிகால பூஜை நடைபெறும்.

கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next