தீவிரமடையும் ரஷ்யா-உக்ரைன் போர்.. அமெரிக்கா உட்பட 4 நாடுகளின் தூதரகங்கள் தற்காலிகமாக மூடல்!
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உக்ரைனில் உள்ள அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதனால் கோபமடைந்த ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு படைகள் அணு ஆயுதத்தை பயன்படுத்த அனுமதி வழங்கினார். இதனை பொருட்படுத்தாமல், இங்கிலாந்து நாட்டின் ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் தொடுத்து உள்ளது.
இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
எந்த நேரத்திலும் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் தூதரகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
Ads
Recent International News
Trending News
Recent News