விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் தவறில்லை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

there-is-nothing-wrong-in-bringing-in-agro-based-industries-minister-trbrajaa
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-10-18 08:32:00

தஞ்சாவூர்,

தஞ்சையில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதில் 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் பெண்கள்.

தமிழகத்தில் மொத்தம் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் எந்த தவறுமில்லை. விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள், சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத தொழிற்சாலைகள் வரலாம். தஞ்சையில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சையில் டைட்டல் பார்க் தொடங்கப்பட்டு 15 நாட்களிலேயே அனைத்து அலுவலகங்களும் நிரம்பி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next