Vettaiyan Deleted scene : வேட்டையன் படத்தில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

cinema-deleted-scene-from-vettaiyan-movies-has-been-released-by-lyca-production
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-16 14:32:00

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், அபிராமி, துஷாரா விஜயன் மற்றும் பலரது நடிப்பில் உருவான படம் ‘வேட்டையன்’. கல்வி எனும் பெயரில் செயல்படும் மோசடி கும்பல் பற்றியும் என்கவுன்ட்டர் குறித்த கருத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ‘அந்தா கானூன்’, ‘ஹம்’ படங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட 33 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் இருவரும் ஒன்றாக இப்படத்தில் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு மத்தியில் ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியான முதல் நாள் இந்திய அளவில் ரூ. 30 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளியானது. அதே போல் தற்போது வரை உலகெங்கிலும் வேட்டையன் படம் மொத்தமாக ரூ. 240 கோடிக்கும் அதிகமாகி வசூல் வேட்டை நடத்தியுள்ளது. மேலும் அனிருத் இசையில் உருவான படத்தின் 9 பாடல்களும் வெளியானது.

இந்த நிலையில், ‘வேட்டையன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை தயாரிப்பு நிறுவனமான லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ரஜினி மற்றும் பகத் பாசில் கதாபாத்திரங்களுக்கு இடையேயான நகைச்சுவை கலந்த அந்தக் காட்சி தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Trending News
Recent News
Prev
Next