பாஜகவில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா… பிரபலங்கள் வாழ்த்து…

cricket-cricketer-ravindra-jadeja-joined-bjp-in-the-presence-of-prime-minister-narendra-modi
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-05 22:09:00

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரவீந்திர ஜடேஜாவின் மனைவி குஜராத் எம்எல்ஏவாக இருந்து வரும் நிலையில், தற்போது அவரும் பாஜகவில் இணைந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த ஆல் ரவுண்டராக இருந்து வருபவர் ரவீந்திர ஜடேஜா.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வென்ற இந்திய அணியில் ஜடேஜா இடம் பெற்றிருந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வை அறிவித்துள்ளார். தற்போது அவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

1988ல் குஜராத்தின் சௌராஷ்ட்ராவில் பிறந்த ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக 72 டெஸ்ட் மற்றும் 197 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 514 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இடதுகை பேட்ஸ்மேனான அவர் 6000 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரராக பல போட்டிகளில் அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார் ரவிந்திர ஜடேஜா. இந்த நிலையில் ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார்.

அவரது உறுப்பினர் அட்டையை ஜடேஜாவின் மனைவி ரிவாபா சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். பாஜகவில் இணைந்துள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கு பிரபலங்களும், பாஜக நிர்வாகிகள் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த முறை சுமார் 10 கோடி பேரை கட்சியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நாடு முழுவதும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next