SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்.. வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு இனி வட்டி உயர்வு!
ரிசர்வ் வங்கியால் வங்கிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கடன் உள்குறிப்பு விகிதமான MCLR-ஐ எஸ்பிஐ வங்கி 10 புள்ளிகள் உயர்த்தியுள்ளது.
கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதமான எம்.சி.எல்.ஆர் விகிதத்தை, எஸ்.பி.ஐ வங்கி 9 சதவிகிதத்தில் இருந்து 9.10 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. எம்.சி.எல்.ஆர் வட்டி விகித உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதங்களை எஸ்.பி.ஐ வங்கி உயர்த்தி இருந்தது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால், அதனுடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரும். இதன் விளைவாக, கடன்களுக்கான இ.எம்.ஐ தொகையும் அதிகரிக்கும்.
எனினும், எம்.சி.எல்.ஆர் வட்டி உயர்வால் பெரும்பாலும் கார்ப்பரேட் கடன்களுக்கான வட்டி விகிதமே உயரும். எனவே, வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற சிறு கடன்களை வாங்கியவர்களுக்கு பாதிப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.