பயிர்களுக்கு காப்பீடு செய்ய பேரையூர் விவசாயிகளுக்கு அழைப்பு

how-to-apply-to-periyur-farmers-for-crop-insurance-madurai-agriculture-department-yta-gwi
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-20 17:54:00

இந்த ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் டி.கல்லுப்பட்டி வட்டார விவசாயிகள் காரிப்பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என்று வேளாண் உதவி இயக்குனர் விமலா செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடப்பு காரிப்பருவத்துக்கு மக்காச்சோளம், நிலக்கடலை, பாசிப்பயறு, பருத்தி ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். ஒரு ஏக்கர் மக்காச்சோளத்திற்கு ரூபாய் 588, பருத்தி ரூபாய் 200க்கும். நிலக்கடலை ரூபாய் 530 க்கும், பாசிப்பயறு ரூபாய் 308க்கும் பிரீமிய தொகையை விவசாயிகள் செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம்.

நிலக்கடலை பயிருக்கு செப்டம்பர் 16ஆம் தேதியும், பருத்தி, மக்காச்சோளம், பாசிப்பயிறு ஆகிய பயிர்களுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதியும் பயிர் காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் ஆகும். இத்திட்டத்தில் பயிர் கடன் பெற்ற விவசாயிகள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய வங்கிகளிலும் பயிர் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் பயிர் காப்பீடு செய்யலாம்.

சாகுபடி செய்யப்பட்ட பயிர்களின் அடங்கல், வங்கி பாஸ் புக் எண், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும் தொடர்பான விவரங்களை அறிய வேணாம் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

Trending News
Recent News
Prev
Next