மாதந்தோறும் லட்சங்களில் வருமானம்... சொந்த தொழில் தொடங்க வாய்ப்பு தரும் அமுல் நிறுவனம்!

how-to-apply-to-start-a-profitable-amul-store
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 17:13:00

அமுலுடன் வணிகம் செய்வதற்கு எளிமையான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தொழில் முனைவோராக விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல வருமானத்தை ஈட்டலாம்.

மனிதனுக்கு அன்றாடத் தேவைகளில் முக்கியமானது உணவு. எனவே பல்பொருள் அங்காடிகள் முதல் மளிகைக் கடைகள் வரை ஆண்டு முழுவதும் விற்பனை நடைபெறுகிறது. அத்துடன் அன்றாட வாழ்க்கையில் பால் ஒரு முக்கியமான பொருள். மக்கள் தினமும் பால் பயன்படுத்துகின்றனர். அந்த பால் பொருட்களை விற்பனை செய்ய அமுல் நிறுவனம் முகவர் உரிமை வழங்குகிறது. அதாவது பிரான்சைஸ் உரிமை வழங்குகிறது.

அமுல் நிறுவனத்துடன் நீங்கள் இணைந்து தொழில் செய்யும்போது, உங்களது லாபத்தில் பங்கு கேட்காது. அத்துடன், அமுல் உங்களுக்கு கமிஷனில் பொருட்களை வழங்குகிறது. நீங்கள் எவ்வளவு பொருட்களை விற்பனை செய்கிறீர்களோ, அவ்வளவு கமிஷன் கிடைக்கும். பால் மற்றும் தொடர்புடைய பொருட்களின் தேவை காரணமாக, விற்பனை எப்போதும் நன்றாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கமிஷன் வடிவில் ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் பெற வாய்ப்புள்ளது.

அமுல் உரிமையை எடுப்பது எப்படி?

அமுல் அவுட்லெட், அமுல் ரயில்வே பார்லர் மற்றும் அமுல் கியோஸ்க் ஆகியவற்றின் உரிமையைப் பெற, நீங்கள் ரூ.2 லட்சம் செலவழிக்க வேண்டும். பிராண்ட் பாதுகாப்பிற்காக ரூ.25,000, புதுப்பித்தலுக்கு ரூ.1,00,000 மற்றும் உபகரணங்களுக்கு ரூ.70,000 ஆகியவை அடங்கும். இந்த மூன்று கடைகளுக்கான கடையின் அளவு 100 -150 சதுர அடியாக இருக்க வேண்டும்.

அமுல் ஐஸ்கிரீம் ஸ்கூப்பிங் பார்லர் திறக்க ஆகும் செலவு ரூ.6 லட்சம். இதில், ரூ.50,000 செக்யூரிட்டி டெபாசிட், ரூ.4 லட்சம் சீரமைப்பு செலவுகள் மற்றும் இயந்திரங்களுக்கு ரூ.1.5 லட்சம் செலுத்த வேண்டும்.

சந்தையில் ஒரு முக்கிய இடத்தில் அமுல் கடையை திறந்தால், உங்கள் மாத வருமானம் ரூ.2 முதல் ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு மேல் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் நிறுவனத்திடமிருந்து பெறும் கமிஷனில் இருந்து ஒருவர் நன்றாக சம்பாதிக்கலாம்.

Trending News
Recent News
Prev
Next