விஜய் சேதுபதியின் மகாராஜா ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்..!

cinema-vijay-sethupathis-magaraja-movie-to-be-released-in-netflix
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 17:51:00

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி பல வாரங்கள் கடந்தும் தற்போது வரை மக்கள் திரையரங்குகளுக்கு சென்று மகாராஜா படத்தை பார்த்து வருகின்றனர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, நட்டி, முனீஸ்காந்த், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.  திரையரங்குகளில் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா, பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

நான் லினியர் முறையில் ஆழமான கருத்தை சொல்லும் திரைக்கதையின் மூலம் மக்கள் நெஞ்சங்களில் கனத்தை ஏற்படுத்தியது இந்த படம். வெளியான முதல் பத்து நாளில் மகாராஜா திரைப்படம் ரூ. 81 கோடி வசூலை குவித்துள்ளது.  விரைவில் இந்த படம் 100 கோடி வசூலை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

திரையரங்குகளில் படம் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது, இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் எப்போது ஓடிடி தலத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது மகாராஜா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, வரும் 19 ஆம் தேதி பிரபல ஓடிடி தலமான நெட்ப்ளிக்சில் வெளியாகவுள்ளது.

Trending News
Recent News
Prev
Next