Viduthalai 2: இயக்குனர் வெற்றிமாறனின் வேட்கை.. 'விடுதலை 2' குறித்து சிலாகித்த திருமாவளவன்!

cinema-vck-leader-about-viduthalai-2-movie-and-director-vetrimaaran-nw-mma-ws-b
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-23 07:44:00

“தத்துவம் இல்லாத தலைவர்கள்தான் ரசிகர்களை மட்டும் உருவாக்குவார்கள், போராளிகளை உருவாக்க முடியாது” என ‘விடுதலை 2’ திரைப்படத்தில் இடம் பெற்ற வாசகம் தற்போதைய சூழலுக்குப் பொருத்தமானது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

‘விடுதலை 2’ திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருடன் பார்த்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “வலதுசாரி அரசியல் நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய நிலையில் ‘விடுதலை 2’ திரைப்படம் கருத்தியல் ரீதியாக இடதுசாரி அரசியல் கருத்தை முன்னெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.

மேலும் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்த பொன்பரப்பி தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னெடுத்த ஆயுத முறை தவறாக இருக்கலாம், ஆனால் அவர்களது கருத்து என்றும் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

இது வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் அல்ல என்றும், அதிகார வர்க்கம் எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தின் பண்புகளைத் தான் வெளிப்படுத்தும் என்பதை இந்தத் திரைப்படம் காட்டுவதாகவும், இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தாண்டி அம்பேத்கர் அரசியலாக, பெரியார் அரசியலாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இளம் தலைமுறையினரை அரசியல்படுத்த வேண்டும் என்கிற வேட்கையோடு இயக்குனர் வெற்றிமாறன் ‘விடுதலை 2’ படத்தை எடுத்திருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next