INW19 vs BAW19 | ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி - வங்கதேசத்தை வீழ்த்திய சிங்கப்பெண்கள்..!
முதன்முறையாக நடத்தப்பட்ட 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, மகளிர் டி20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மலேசியாவில் கடந்த 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய - வங்கதேச அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசியது.
நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணியில் கோங்கடி திரிஷா அபாரமாக விளையாடி அரைசதம் கடந்து, அணியில் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். மிதிலா வினோத் (17), கேப்டன் நிகி பிரசாத் (12) ஆகியோரும் பங்களித்ததால், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 118 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 18.3 ஓவர்கள் முடிவில் வெறும் 76 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இதையடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.