ஐ.பி.எல்.: தோனி போல ஆண்டர்சன் வருகிறார் - டி வில்லியர்ஸ் பாராட்டு

ipl-anderson-is-coming-like-dhoni-praises-de-villiers
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-11-10 05:15:00

கேப்டவுன்,

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது வரும் 24, 25 தேதிகளில் நடைபெறம் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐ.பி.எல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம் செய்துள்ளார். ஆண்டர்சன் டி20 போட்டியில் கடைசியாக 2014-ல் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மகேந்திரசிங் தோனியை போல் ஐ.பி.எல். தொடரில் விளையாட ஆண்டர்சன் வருவதாக ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இது தோனி தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டது போலவே தோன்றுகிறது. ஆண்டர்சன் தன்னுடைய அடிப்படை விலையை ரூ.1.25 கோடிகளாக நிர்ணயித்துள்ளார். அவருடைய தரத்திற்கு அது நிகரானது இல்லை. இருப்பினும் அவர் அதே விலைக்கு ஏலத்தில் வாங்கப்படலாம். 3 மாதம் இந்தியாவுக்கு வந்து விளையாடுவதற்காக அவர் தன்னுடைய குடும்பத்தை விட்டு வருவதற்கு தயாராக உள்ளார். அவர் வாங்கப்பட்டால் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்வார்.

ஒருவேளை நானாக இருந்தால் ஏதேனும் ஒரு ஐ.பி.எல். அணி ரூ. 2 - 3 கோடிக்கு அவரை வாங்குவதை விரும்புகிறேன். இளம் வீரர்களுக்கு தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்காகவே அவரை நான் வாங்குவேன். 42 வயதில் அவரால் கடந்த காலத்தைப் போல் அசத்த முடியாமல் போகலாம். அனுபவத்தை பார்த்து அவரை யாராவது வாங்குவார்கள் என்று நம்புகிறேன். மிகச்சிறந்த வீரரான அவர் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள இளம் வீரர்களிடம் தன்னுடைய அனுபவத்தை பகிர்வதை நான் பார்க்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next