அமரன் பட வெற்றி: ஜிவி பிரகாஷுக்கு விலையுயர்ந்த கிப்ட் கொடுத்து சப்ரைஸ் செய்த சிவகார்த்திகேயன்!

cinema-sivakarthikeyan-surprised-gv-prakash-with-an-expensive-gift-for-amaran-success
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-09 14:22:00

தீபாவளி அன்று தமிழில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் “அமரன்” படம் வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை மையமாக வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான படம். இதில் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். காஷ்மீர் சூழல், இந்திய ராணுவம், முகுந்த் வரதராஜனின் சிறப்பான பணி, நாட்டுக்கான அவரது தியாகம் மற்றும் அவரது காதல், குடும்பம் இவற்றை சுற்றி அமைக்கப்பட்ட கதைக்களம் மக்களை பெருமளவில் கவர்ந்தது. கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத்தை தயாரித்துள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் நடிப்பு மக்களின் ஆரவாரத்தை பெற்று வருகிறது. இதுவரை தான் ஏற்று நடித்திராத அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவியின் அபார நடிப்பு பலரின் கைத்தட்டல்களை பெற்று வருகிறது. ஜிவி பிரகாஷ் தனது இசையின் மூலம் படத்திற்கு மேலும் வலுவை சேர்த்துள்ளார், ஒவ்வொரு பாடலும் பார்வையாளர்களின் ஃபேவரைட் பாடலாக தற்போது மாறியுள்ளது.

படத்தின் பேக்ரவுண்ட் பிஜிஎம் மாஸ் காட்டியுள்ளது. அமரன் படம் வெளியான முதல் நாள் ரூ.42.3 கோடி வசூல் செய்து தொடக்கத்திலேயே கெத்து காட்டியது. தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 98 கோடி வசூலை எட்டியுள்ளது ‘அமரன்’. படத்தின் வெற்றியில் முக்கிய பங்குவகிக்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு சிவகார்த்திகேயன் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

‘அமரன்’ பட வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவிக்கு சிவகார்த்திகேயன் விலையுயர்ந்த ‘TAG Heuer’ வாட்சை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் விலைமதிப்பு கொண்ட காஸ்ட்லி வாட்சை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறி வாட்ச் போட்டோவை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next