புதிய படங்களில் பிஸியான லவ்டுடே படத்தின் ஹீரோ… சம்பளத்தை அதிரடியாக உயர்த்தினாரா?
நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் 2022 இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக தியேட்டர் ரிலீஸில் மட்டும் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலை அள்ளியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை இவானா நடித்திருந்தார். தியேட்டர் ரிலீஸுக்கு பின்னர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான லவ் டுடே திரைப்படம் ஓடிடி ஒளிபரப்பிலும் சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தை ஆரம்பிக்கும் போது பிரதீப் 70 லட்சம் ரூபாயை சம்பளமாக நிர்ணயித்ததாக கூறப்படுகிறது. படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூடுதலாக அவருக்கு ரூ. 80 லட்சம் வழங்கப்பட்டு மொத்தம் லவ் டுடே படத்திற்கு பிரதிப் ரங்கநாதன் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அவர் டிராகன் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என 2 படங்களில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களுக்கும் சேர்த்து மொத்தமாக அவர் 17 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. லவ் டுடே படத்திற்கு ரூ. 1.50 கோடி பெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களில் பிரதிப் ரங்கநாதன் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திருக்கிறார். இருப்பினும் முதல் படத்தின் போது எப்படி எளிமையாக அனைவரிடமும் பழகினாரோ அதே போன்று தான் தற்போதும் எளிமையாக இருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
லவ் டுடே படத்திற்கு முன்பாக ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.