“பிரிவினைவாதத்தை கைவிட்டால் பாகிஸ்தானுடன் பேசலாம்” - அமைச்சர் ஜெய்ஷங்கர் திட்டவட்டம்!

we-can-talk-with-pakistan-if-we-give-up-separatism-minister-jaishankar
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-16 19:48:00

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். இதில் அவர், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது; “எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதங்களை கைவிடாதவரை பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையை தொடர முடியாது” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

அதில் பேசிய ஜெய்சங்கர், “எஸ்.சி.ஓ.வின் முதன்மையான குறிக்கோள்களான பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது, தற்போதைய காலத்தில் இன்னும் முக்கியமாகிறது. இதற்கு நேர்மையான பேச்சுவார்த்தை, நம்பிக்கை, நல்ல அண்டை நாடு மற்றும் எஸ்.சி.ஓ. சாசனத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை தேவை. இந்த மூன்று தீமைகளை எதிர்கொள்வதில் எஸ்.சி.ஓ. உறுதியாகவும் சமரசமின்றியும் இருக்க வேண்டும்.

உலகமயமாக்கல் மற்றும் மறுசீரமைத்தல் என்பது இன்றைய யதார்த்தம். எஸ்.சி.ஓ. நாடுகள் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். ஒத்துழைப்பு என்பது பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்று பேசினார்.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next