மாத கடைசியில் வரும் தீபாவளி... பண நெருக்கடி இல்லாமல் கொண்டாடாவது எப்படி..?

how-to-save-money-on-diwali-shopping-tips-and-tricks-plan-your-diwali-purchase-ags-pdp
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-16 18:45:00

தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரே குஷி என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் புத்தாடைகள், உணவு பலகாரங்கள் மட்டுமின்றி முக்கியமான ஒன்றான பட்டாசு. புத்தாடை மற்றும் பட்டாசு பெரிய செலவுகள் என்றபோதிலும் அதனை வாங்காமல் இருக்க முடியாது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையானது இந்தாண்டு, மாத கடைசியில் வருகிறது. அப்படியெனில் திட்டமிட்டு செலவுகளை செய்யும் பட்சத்தில் இதர செலவுகளான இனிப்புகள் மற்றும் உணவுகளையும் வாங்கி மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட முடியும். செலவுகளை எப்படி திட்டமிட்டு செய்வது உள்ளிட்ட விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்துக்கள் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். புத்தாடை அணிந்து இனிப்புகளை பகிர்ந்து கொண்டு பட்டாசு வெடித்து கொண்டாடும் தீபாவளி என்றாலே பலருக்கு விருப்பம். அந்த அளவுக்கு தீபாவளி மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் கொண்டது. ஆனால் இந்த மகிழ்ச்சியோடு தீபாவளிக்கான செலவையும் கையாள வேண்டும் என்பது பெரியவர்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. அதிலும் இந்த முறை தீபாவளியானது மாத இறுதி நாளான அக்டோபர் 31 ம் தேதி வருகிறது. அதை நினைத்து பலருக்கு செலவுக்கு என்ன செய்வது என பெரியவர்கள் விழி பிதுங்கி இருப்பார்கள்.

வேலைக்கு செல்வோர் ஒருசிலர் அலுவலகத்தில் வரும் போனஸை வைத்து தான் தீபாவளியை கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வருவதால் ஒருசில அலுவலகத்தில் முன்கூட்டியே நவம்பர் மாத சம்பளத்தை வழங்குவது வழக்கம். தீபாவளி ஷாப்பிற்கு அதனை நாம் முழுவதும் பயன்படுத்தி விட்டால் அடுத்த மாதமுழுவதும் நாம் பண நெருக்கடியில் சிக்கக் கொள்வோம்.  எனவே, கடனில் சிக்காமல் அதேநேரம் தீபாவளியை மனநிறைவுடன் கொண்டாடுவது எப்படி என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகிறது.

முதலில் வீட்டில் யாருக்கெல்லாம் புதிய ஆடை எடுக்க வேண்டும் என பட்டியலிட்டு அதில் பாதி நபர்களுக்கு இந்த மாத சம்பளத்தில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள். மீதி நபர்களுக்கு தீபாவளி சம்பளத்தில் வாங்கும் பட்சத்தில் ஒரே நேரத்தில் மொத்த நபர்களுக்கும் ஆடை வாங்கும் சுமையை குறைக்கலாம். அது மட்டும் இல்லாமல் கடைசி நேர கூட்ட நெரிசலையும் தவிர்த்து குறைந்த விலைக்கு நல்ல ஆடைகளை தேடி வாங்க முடியும்.

இதே போன்று தான் பட்டாசுகளும். தீபாவளி நெருங்க நெருங்க பட்டாசுகளின் விலை உச்சத்தை அடையும். அதை தவிர்க்க முன் கூட்டியே பட்டாசுகளை வாங்கி வைப்பதன் மூலம் கடைசி நேர கூட்ட நெரிசலையும், விலை உயர்வையும் தவிர்க்கலாம். தீபாவளிக்கு பெரிய செலவு என்றால் பட்டாசுகள் மற்றும் ஆடைகள் தான் இந்த இரண்டையும் திட்டமிட்டு செய்யும் பட்சத்தில் இதர செலவுகளான இனிப்புகள் மற்றும் உணவுகளை எளிதாக கையாள முடியும். மொத்தத்தில் முன்னதாக திட்டமிட்டு தயாராவதன் மூலம் பண்டிகையை எவ்வித தடையும் இன்றி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாட முடியும்.

Trending News
Recent News
Prev
Next