இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட்… மழையால் கைவிடப்பட்ட முதல் நாள் போட்டி!

cricket-cricket-india-vs-newzealand-first-test-match-day-called-of-due-to-rain-in-bengaluru
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-16 17:57:00

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது . இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் போட்டி பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் கடுமையான மழை பெய்தது. இதனால் 5 நாட்கள் கொண்ட போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.

இரண்டாம் நாள் ஆட்டம் வியாழக்கிழமை நடக்கவுள்ள நிலையில் காலை 8.45 மணிக்கு டாஸ் போடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டமாவது மழை பாதிப்பின்றி நடக்குமான என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணி தனது அதிரடியான வெற்றிகளால் பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 74.24 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 62.50 வெற்றி சதவீதத்துடன் 2 ஆம் இடத்திலும், இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மோதும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பத கவனிக்கத்தக்கது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி-

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது. சிராஜ், ஆகாஷ் தீப்

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next