உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா? - மத்திய அரசுக்கு பரிந்துரை!

cji-dy-chandrachud-recommends-justice-sanjiv-khanna-as-his-successor
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-17 06:58:00

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. இதில், ஏற்கனவே கடந்த மாதம் ஒன்றாம் தேதி, நீதிபதி ஹிமா கோலி ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம், அடுத்த மாதம் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள சஞ்சீவ் கண்ணாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.

இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், அடுத்த மாதம் 11-ஆம் தேதி முதல், அடுத்த ஆண்டு மே 13-ஆம் தேதிவரை தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவிவகிப்பார்.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கான நூலகத்தில் புதிதாக பெண் நீதிபதி சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவியுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதி தேவதை சிலையின் கண்கள் கட்டப்பட்டிருக்கும், கையில் வாள் இருக்கும். தற்போது, வாள், கண்கட்டு அகற்றப்பட்டு, கையில் புத்தகம், ஆடை அணிகலன்கள், தலையில் கிரீடம், கையில் புத்தகம், நெற்றித் திலகத்துடன் இருக்கும் வகையில் நீதி தேவதை சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Trending News
Recent News
Prev
Next