நள்ளிரவில் மிரட்டப்போகும் மழை... கட்டாயம் இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க... சென்னை மக்களை அலெர்ட் செய்த வெதர்மேன்!

chennai-rain-update-heavy-rain-may-fall-from-midnight-high-alert-to-chennai-people
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-15 18:49:00

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. இதில், சென்னையில் ஒரு மணி நேரத்தில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டியது. சென்னை மாநகராட்சியில் அதிகபட்சமாக உத்தண்டியில் 6.4 செ.மீ மழை பதிவானது.

இதேபோல் வடபழனி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவானது. வேளச்சேரியில் 5.5 செ.மீ மழைப்பொழிவும், ராயப்பேட்டை, சோழிங்கநல்லூர், பாலவாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழைப்பொழிவும் பதிவானது. ராயபுரம், பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், மணலி பகுதிகளிலும் 5 செ.மீ மழைப்பொழிவு பதிவானது.

இதற்கிடையே அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் நிலை கெண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, பிரபல தனியார் வானிலை நிபுணரான வெதர்மேன் பிரதீப் ஜான், தனது எக்ஸ் பக்கத்தில் சென்னை மழை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் சென்னையில் கடந்த 6 மணிநேரமாக வட சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

இன்று நள்ளிரவில் பெய்யும் மழை பல இடங்களில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமாக பதிவாக கூடும். குறிப்பாக வட சென்னையில் 250 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யலாம். போன், லேப்டாப்பை கண்டிப்பாக சார்ஜ் செய்து கொள்ளுங்கள். அபார்ட்மென்ட்டில் இருப்பவர்கள் தண்ணீர் தேவைக்காக மோட்டார் உபயோகித்து தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத தேவையின்றி மற்ற எதற்கும் வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next