Weather Update | தாழ்வு மண்டலம் எங்க இருக்கு தெரியுமா? - லைவ்வில் பார்ப்பது எப்படி?

you-can-also-see-where-the-low-pressure-area-is-moving-in-the-satellite-view
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-15 17:44:00

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது என்றும், இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மிக கனமழையும், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் காற்று அழுத்த தாழ்வு பகுதியம், அது தழுவு மண்டலமாக மாறி பிறகு எங்கு நகர்கிறது என்றும் நீங்களே சாட்லைட் காட்சியில் பார்க்கலாம்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next