மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி எப்போது? - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

election-commission-announce-maharashtra-and-jarkhand-eletion
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-15 17:06:00

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்கப்பட இருக்கிறது என காலை தகவல் வந்தன. அதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர்கள் இரு மாநிலத்திற்கான தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.

288 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த மாதம் 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அந்த மாநிலத்தில் சிவ சேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு தற்போது ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணியில் பாஜக, அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இடம்பிடித்துள்ளன. அதேபோல் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிகிறது.

81 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்டில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியில் இருந்து சமீபத்தில் முத்தத் தலைவரான சம்பாய் சோரன் வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளார்.

அதன்படி இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். நவம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவும், நவம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

இதேபோல் நவம்பர் 13ம் தேதி ராகுல் காந்தி ராஜினாமா செய்ததன் மூலம் காலியாக உள்ள வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

Trending News
Recent News
Prev
Next