மழை வெள்ளத்தால் பாதிப்பா? கேப்டன் ஆலையத்தில் தங்கிக்கோங்க... பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

chennai-rains-dmdk-office-doors-open-for-those-affected-says-premalatha-vijayakanth
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-15 18:25:00

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் தங்கிக் கொள்ளலாம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு அதிகாரிகளும், அமைச்சர்களும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 95 விழுக்காடு வேலைகள் நிறைவு பெற்றுவிட்டதாக சொல்லும் அரசு எந்தவித வேலைகளையும் முடித்ததாக தெரியவில்லை என்று சாடியுள்ளார்.

மழைநீர் வடிகால் திட்டமோ, மெட்ரோ திட்டமோ 100 சதவீதம் முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிரேமலதா,  மின் கம்பங்களால் எந்தப் பாதிப்பும் இல்லாமல் மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகமான கேப்டன் ஆலயத்தில் தங்கிக்கொள்ளலாம் என்றும், அங்கு தங்கும் மக்களுக்கு தேவையான உணவு அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக நிர்வாகிகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next