‘6ஜி சேவை மூலம் இந்தியா டெலிகாம் துறையில் உச்சத்தை தொடும்’ – ஆகாஷ் அம்பானி பேச்சு

india-will-have-an-even-better-record-with-6g-said-akash-ambani-in-mobile-congress
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-15 15:51:00

6ஜி சேவை மூலம் இந்தியா டெலிகாம் துறையில் உச்சத்தை தொடும் என்று ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மொபைல் காங்கிரஸ் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து மொபைல் மற்றும் டெலிகாம் துறையை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானிஜி, டெலிகாம் துறை இயக்குனர் நீரஜ் மிட்டல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் சார்பாக பங்கேற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் ஆகாஷ் அம்பானி பேசியதாவது-

தொடர்ந்து 3 ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது தலைமையின் கீழ் இந்தியாவில் டிஜிட்டல் துறை சர்வதேச தரத்திற்கு உயர்ந்துள்ளது.

டிஜிட்டல் டெலிகாம் துறையை நீங்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறீர்கள். இந்தியாவில் 145 கோடி மக்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

ஒரு இளைஞர் என்கிற முறையில் பிரதமர் மோடி இளைஞர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். அவர்கள் லட்சியங்களை அடைவதற்காக பிரதமர் மோடி ஊக்கப்படுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி எல்லாவற்றையும் சாத்தியப்படுத்துகிறார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய 2ஜி தொழில்நுட்பத்தில் இருந்தது. இப்போது 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் பரவலாக்கப்பட்டுள்ளது. 6ஜி சேவையுடன் இந்தியா டெலிகாம் துறையில் இன்னும் சாதனைகளை படைக்கும் என்பதை நான் பிரதமர் மோடிக்கு உறுதி அளிக்கிறேன்.

மொபைல் பிராட்பேண்ட் சேவையில் இந்தியா 155 ஆவது இடத்தில் இருந்தது. இன்றைக்கு அதிகமான டேட்டாக்களை பயன்படுத்தும் உலகின் மிகப்பெரும் சந்தையாக இந்தியா மாறியுள்ளது.

யுபிஐ முலம் பணத்தை செலுத்தும் முறையானது. இன்றைக்கு நம்பர் ஒன் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையாக மாறியுள்ளது. மிகு குறைவான விலையில் டேட்டாக்களை பயன்படுத்தும் நாடாக வளர்ச்சி கண்டுள்ளது இந்தியா. சராசரியாக நபர் ஒருவர் மாதம் 30 ஜிபி டேட்டாக்களை இந்தியாவில் பயன்படுத்துகிறார்.

இந்த மாற்றத்தில் ஜியோவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  என்று பேசினார்.

Ads
Recent Business News
Trending News
Recent News
Prev
Next